சுடச்சுட

    

    தலைக்கவசம் அணியாததால் 4 மாதங்களில் 1,837 பேரிடம் அபராதம் வசூல்

    By DIN  |   Published on : 15th May 2017 08:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 1,837 பேரிடம் இருந்து ரூ.ஒரு லட்சத்து 83 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
    மாவட்டம் முழுவதும் போக்குவரத்துப் பிரிவு போலீஸார் தினமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, கடந்த 4 மாதங்களில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 1,837 பேரிடம் இருந்து மொத்தம் ரூ.ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 600 அபராதம் வசூலித்துள்ளனர்.
    மேலும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 485 பேரிடம் ரூ.2 லட்சத்து 30 ஆயிரமும், அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 214 பேரிடம் ரூ.66 ஆயிரத்து 200-ம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai