சுடச்சுட

    

    தென்னக நதிகளை இணைத்தால் விவசாயம் செழிக்கும்: நல்லசாமி பேச்சு

    By DIN  |   Published on : 15th May 2017 08:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தென்னக நதிகளை இணைத்தால் விவசாயம் செழிக்கும் என்று தமிழ்நாடு விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலச் செயலர் நல்லசாமி தெரிவித்தார்.
    தமிழ்நாடு விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகக்
    குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலச் செயலர் நல்லசாமி தலைமை வகித்தார். மாநில கள் இயக்க அமைப்பாளர் கதிரேசன், விவசாயச் சங்க நிர்வாகிகள் வாக்கடை புருஷோத்தமன், தண்டராம்பட்டு சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை பாண்டியதுரை வரவேற்றார். கூட்டத்தில், நல்லசாமி பேசியதாவது: தமிழகத்தில் விவசாயம் செழிக்க தென்னக நதிகளை இணைக்க வேண்டும். விவசாய ஆணையத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தினால் போதும். வேறு எந்த சலுகையும் விவசாயிகளுக்கு வழங்கத் தேவையில்லை.
    அரசு ஊழியர்களுக்கு சம்பள வழங்க ஆணையம் அமைப்பதுபோல, விவசாயிகளுக்கும் மத்திய அரசு உதவ வேண்டும். தமிழக அரசு நீரா என்ற பெயரில் புளிக்காத கள் இறக்க அனுமதிப்பது குறித்து செயல்திட்டம் வகுத்துள்ளது வரவேற்கத்தக்கது. கேரளத்தில் கள் இறக்கும் பணிகளை போல் இல்லாமல், ஆப்பிரிக்காவில் உள்ள கள் இறக்கும் முறையை அரசு அறிமுகம் செய்ய வேண்டும் என்றார். கூட்டத்தில், கூட்டமைப்பு நிர்வாகிகள் கீழ்பென்னாத்தூர் சுப்பிரமணி, பொன்னுரங்கம், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai