சுடச்சுட

  

  மதுக் கடைக்கு எதிர்ப்பு: செய்யாறு எம்எல்ஏவை முற்றுகையிட்ட பொதுமக்கள்

  By DIN  |   Published on : 15th May 2017 08:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  செய்யாறு அருகே புதிதாக அரசு டாஸ்மாக் மதுக் கடை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, எம்எல்ஏ தூசி கே.மோகனை கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனர்.
  செய்யாறை அடுத்த மோரணம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை அதிமுக சார்பில் தண்ணீர்ப் பந்தல் திறப்பு விழா நடந்தது. தண்ணீர்ப் பந்தலை செய்யாறு தொகுதி எம்எல்ஏ தூசி கே.மோகன் திறந்து வைத்தார். பின்னர், நிகழ்ச்சியை முடித்துவிட்டு காரில் ஏறுவதற்காக எம்எல்ஏ சென்றபோது, அவரை மோரணம் ஏ காலனி பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட பலர் திடீரென முற்றுகையிட்டனர்.
  அப்போது, பொதுமக்கள் கூறியதாவது: எங்கள் குடியிருப்புப் பகுதியில் புதிதாக அரசு டாஸ்மாக் மதுக் கடை திறப்பதற்காக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பலமுறை வெம்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகம், வெம்பாக்கம் ஒன்றிய அலுவலகங்களில் மனு அளித்துள்ளோம். இந்நிலையில், மதுக் கடைக்கான புதிய கட்டடம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனவே, குடியிருப்புகள் நிறைந்த மோரணம் ஏ காலனி பகுதியில் மதுக் கடை திறக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
  இதையடுத்து, எம்எல்ஏ தூசி கே.மோகன் கூறுகையில், எந்தக் கிராமத்தில் அரசு மதுக் கடை அமைக்க எதிர்ப்புத் தெரிவிக்கப்படுகிறதோ, அங்கு கட்டாயமாக மதுக் கடை அமைக்கப்படாது. மேலும், மோரணம் ஏ காலனி பகுதியில் மதுக் கடை திறக்கப்படாமல் தடுக்கப்படும் என்றார். இந்த சம்பவம் காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai