Enable Javscript for better performance
மரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறு அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.
    செய்யாறை அடுத்த வடபூண்டிபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கோபி மகன் ராஜாதுரை (20). இவர், வீட்டின் அருகேயுள்ள பனை மரத்தில் பனங்காய் வெட்டுவதற்காக வெள்ளிக்கிழமை ஏறியுள்ளார்.
    அப்போது, எதிர்பாராதவிதமாக மரத்தில் இருந்து ராஜாதுரை தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். பின்னர், அவர் செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த ராஜாதுரை அங்கு சனிக்கிழமை உயிரிழந்தார்.
    இதுகுறித்த புகாரின்பேரில், மோரணம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஏழுமலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai