சுடச்சுட

    

    திருவண்ணாமலை அருகே விவசாயியைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக மற்றொரு விவசாயியை போலீஸார் கைது செய்தனர்.
    திருவண்ணாமலையை அடுத்த அண்டம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி அண்ணாதுரை (38). இதே பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (56). இருவரும் உறவினர்கள். இருவருக்கும் தலா ஒரு ஏக்கர் வீதம் விவசாய நிலம் உள்ளது.
    இருவரும் பொது கிணற்றில் இருந்து தங்கள் நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வந்தனர். அண்மையில் இவர்கள் கிணற்றை தூர்வாரினராம். கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை அகற்றுவது தொடர்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
    சில தினங்களுக்கு முன்பு டிப்பர் லாரியில் அண்ணாதுரை மண் ஏற்றினாராம். அப்போது, அங்கு வந்த செல்வத்துக்கும், அண்ணாதுரைக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதில், ஆத்திரமடைந்த செல்வம், அண்ணாதுரையை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாராம். பலத்த காயமடைந்த அண்ணாதுரை, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து, வெறையூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai