Enable Javscript for better performance
பணியின்போது மயங்கி விழுந்த நீதிமன்ற ஊழியர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசி நீதிமன்ற வளாகத்தில் பணியின்போது மயங்கி விழுந்த நீதிமன்ற ஊழியர் உயிரிழந்தார்.
    திருவண்ணாமலை மாவட்டம், சேத்துபட்டு ராஜாஜி தெருவைச் சேர்ந்தவர் நாராயணன்(52). மாற்றுத் திறனாளியான இவர், வந்தவாசியில் உள்ள கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் தட்டச்சராக பணிபுரிந்து வந்தார். இவர், கடந்த 15-ஆம் தேதி நீதிமன்ற வளாகத்தில் பணி செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி
    விழுந்தார்.
    இதையடுத்து, நீதிமன்ற ஊழியர்கள் சிகிச்சைக்காக அவரை வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், நாராயணன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், வந்தவாசி தெற்கு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai