சுடச்சுட

  

  திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே சுகநதி ஆற்றில் அம்மன் கற்சிலை செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
  வந்தவாசியை அடுத்த கொவளை கிராமத்தில் சுகநதி ஆற்றில் மணலில் பாதி புதைந்த நிலையில் கற்சிலை இருப்பதை செவ்வாய்க்கிழமை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் பார்த்துள்ளனர். வறண்டு கிடக்கும் ஆற்றில் இந்தச் சிலை மணலில் கவிழ்ந்த நிலையில் புதைந்து கிடந்துள்ளது.
  இதுகுறித்து கொவளை கிராம நிர்வாக அலுவலர் பிரேம்குமாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.  இதையடுத்து, அங்கு சென்ற பிரேம்குமார், சிலை இருப்பதை உறுதி செய்துகொண்டு வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு தகவல் அளித்தார்.
  இதைத் தொடர்ந்து, வட்டாட்சியர்கள் எஸ்.முருகன், நரேந்திரன், துணை வட்டாட்சியர்கள் எஸ்.திருமலை, மூர்த்தி உள்ளிட்ட வருவாய்த் துறையினர் அங்கு சென்று அந்தக் கற்சிலையை பார்வையிட்டனர். அப்போது, அந்தக் கற்சிலை அம்மன் சிலை என்பதும், சுமார் இரண்டரை அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்டதாக இருந்ததும் தெரிய வந்தது.
  பின்னர், பழைமையான அந்தக் கற்சிலையை வருவாய்த் துறையினர் மீட்டு, வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து, அந்தச் சிலை வட்டாட்சியர் அலுவலக பதிவறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

   

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai