சுடச்சுட

    

    திருவண்ணாமலையில் அரசுப் பேருந்துகளின் சீரான இயக்கம் குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்  சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திங்கள்கிழமை இரவு ஆய்வு செய்தார்.
    தமிழகம் முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலும் இந்தப் போராட்டம் நடைபெறுவதால் போதிய அளவு அரசுப் பேருந்துகளை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    அதிகாரிகளுடன் ஆய்வு: இந்நிலையில், திருவண்ணாமலை - செங்கம் சாலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆர்.பொன்னி, அரசுப் போக்குவரத்துக் கழக திருவண்ணாமலை மண்டல பொது மேலாளர்  
    நடராஜன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அ.அழகரசு ஆகியோருடன் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.
    அப்போது, திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் அரசுப் பேருந்துகள் சீரான முறையில் இயக்கப்படுகிறதா என்பது குறித்தும், செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கேட்டறிந்தார். மேலும், பயணிகள் பாதிக்காதவாறு அரசுப் பேருந்துகளை இயக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
    பேருந்து நிலையத்தில் ஆய்வு: இதைத் தொடர்ந்து, திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மாவட்டம் முழுவதும் காவல் துறை மூலம் பயணிகள், பொதுமக்கள், பேருந்துகளுக்கு சிறப்பான பாதுகாப்பு வழங்கப்பட்டு, பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றார்.
    ஆய்வின்போது, முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் எம்.எஸ்.நைனாகண்ணு, முன்னாள் வணிகவரி ஆலோசனைக் குழு உறுப்பினர் பெருமாள் நகர் கே.ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai