Enable Javscript for better performance
இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    சேத்துப்பட்டு மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக செயல்படுத்த வேண்டும். சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளுக்கு தர வேண்டிய நெல் கொள்முதல் பணம் ரூ.1.5 கோடியை உடனே வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை தாமதமின்றி அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஆர்ப்பாட்டத்தின்போது, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பிரகலாதன், தாலுகா குழுச் செயலர் வெங்கிடேசன், சேகர் ஆகியோர் பேசினர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தங்கமணி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai