சுடச்சுட

    

    திருவண்ணாமலை அண்ணா சிலை எதிரே இந்தி திணிப்பு எதிர்ப்பு சிறப்புக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்குக்கு மாவட்டத் தலைவர் வெ.நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் மு.பாலாஜி வரவேற்றார். இந்தி திணிப்பை அனுமதியோம் என்ற தலைப்பில் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, கீழடி எங்கள் தாய்மடி என்ற தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் துணை பொதுச் செயலர் எஸ்.கருணா ஆகியோர் பேசினர்.
    இதில், கவிஞர் ஆரிசன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai