சுடச்சுட

  

  செய்யாறில் 3 அரசுப் பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு: டிஎஸ்பியை முற்றுகையிட்ட தொழிற்சங்கத்தினர்

  By DIN  |   Published on : 17th May 2017 07:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் 3 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாக பேருந்துகளின் ஓட்டுநர்கள் செய்யாறு காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகார் அளித்தனர்.
  இதனிடையே, அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர் முன்னேற்ற மத்திய சங்கத்தின் இணைச் செயலரை விசாரணைக்காக அழைத்துச் சென்ற டிஎஸ்பியை அரசுப் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
  தமிழகத்தில் அரசுப் பேருந்து தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்
  கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் சுமார் 1.5 லட்சம் அரசுப் பேருந்து ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
  இந்நிலையில், செய்யாறில் இருந்து ஆரணி நோக்கிச் சென்ற நகரப் பேருந்து, ஆரணியில் இருந்து செய்யாறு நோக்கி வந்த அரசுப் பேருந்து, செய்யாறில் இருந்து ஆற்காடு நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து ஆகியவற்றின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்தாகத் தெரிகிறது. இது குறித்து அந்தந்த பேருந்துகளின் ஓட்டுநர்கள் செய்யாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
  டிஎஸ்பியை முற்றுகையிட்ட தொழிற்சங்கத்தினர்: இந்நிலையில், அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர் முன்னேற்ற மத்திய சங்கத்தின் இணைச் செயலரான சின்னையன் செவ்வாய்க்கிழமை காலை செய்யாறு உழவர் சந்தைக்கு சென்றாராம். அப்போது, அந்த வழியாக வந்த செய்யாறு டிஎஸ்பி குணசேகரன், சின்னையனை விசாரணைக்காக செய்யாறு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றாராம்.
  இதனையறிந்த போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே டிஎஸ்பி குணசேகரனை முற்றுகையிட்டு, விசாரணைக்கு அழைத்துச் சென்ற சின்னையனை விடுவிக்கக் கோரி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சின்னையன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai