Enable Javscript for better performance
தண்டராம்பட்டு வட்டத்தில் ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி- Dinamani

சுடச்சுட

    

    தண்டராம்பட்டு வட்டத்தில் ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி

    By DIN  |   Published on : 17th May 2017 07:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தண்டராம்பட்டு வட்டத்தில் உள்ள பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான ஏரிகளில் இருந்து வண்டல் மண் எடுத்து விவசாய நிலங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு ஏரியில் இருந்து வண்டல் மண் எடுத்து நிலத்துக்கு பயன்படுத்துவதால் மண் வளம் கூடும்.
    தண்டராம்பட்டு வட்டத்தில் அல்லப்பனூர், பெருங்குளத்தூர், எடத்தனூர், மேல்கரிப்பூர், கொளமஞ்சனூர், ராதாபுரம், கீழ்ராவந்தவாடி, மேல்சிறுப்பாக்கம், புத்தூர்செக்கடி கிராமங்களில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான ஏரிகள் உள்ளன.
    இந்த ஏரிகளில் இருந்து வண்டல் மண் எடுக்க விரும்பும் விவசாயிகள், முறைப்படி மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்கலாம் என்று தண்டராம்பட்டு வேளாண் துறை தெரிவித்துள்ளது. மேலும், ஏரிகளில் மண் வெட்டி எடுக்க யூனிட்டுக்கு ரூ.100 வீதம் (3 கன அடி) பொதுப்பணித் துறைக்கு கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், ஏரிகள் உள்ள பகுதிகளின் உதவி வேளாண் அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர், வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் ஏரிகளில் வண்டல் மண் எடுக்க விவசாயிகள் விண்ணப்பிலாம் என்று தண்டராம்பட்டு வேளாண் அலுவலகம் தெரிவித்துள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai