சுடச்சுட

    

    திருவத்திபுரம் நெல் மண்டி வியாபாரிகள் சங்கக் கூட்டம்  செய்யாறில் அண்மையில் நடைபெற்றது.
    கூட்டத்துக்கு திருவத்திபுரம் அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் ஏ.அருணகிரி, நெல் மண்டி வியாபாரிகள் சங்க நிர்வாகி எஸ்.இ.ஜெயபாலன் மற்றும் மூத்த உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
    கூட்டத்தில், திருவத்திபுரம் நெல் மண்டி வியாபாரிகள் வியாபார சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, தலைவராக பி.உமாபதி, செயலராக பிஆர்.எல்.குருமூர்த்தி, பொருளாளராக எம்.எஸ்.செந்தில்பாண்டியன், துணைத் தலைவராக ஜி.ஹரிராம், கௌரவத் தலைவர்களாக கே.கணேசன், ஏ.அருணகிரி, ஆர்.ரத்தினம், என்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.இ.ஜெயபாலன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
    மேலும், திருவத்திபுரம நெல் மண்டி வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தை சீரமைத்து, விவசாயிகள, வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு குறைவான வாடகைக்கு விடுவது, விவசாயிகள், வியாபாரிகள் நலன் கருதி செய்யாறு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மின்னணு எடை மேடை அமைப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai