Enable Javscript for better performance
பைக் மீது கார் மோதல்: பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

     திருவண்ணாமலை அருகே பைக் மீது கார் மோதியதில் பலத்த காயமடைந்த இளம் பெண் உயிரிழந்தார்.
    திருவண்ணாமலை, அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ஞானசேகரன் (30). இவரது மனைவி ஜெயா (26). இருவரும்
    திருவண்ணாமலையில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை செய்கின்றனர்.
    இந்நிலையில், ஞானசேகரன், தனது மனைவி, 3 வயது மகள் ஜெயவர்த்தினி ஆகியோருடன் திருவண்ணாமலையை அடுத்த கொண்டம் கிராமத்துக்கு பைக்கில் சென்றார். பின்னர், கொண்டம் கிராமத்தில் இருந்து மீண்டும் பைக்கில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். மல்லவாடியை அடுத்த திடீர்குப்பம் கிராமம் அருகே வந்தபோது, எதிரே வந்த கார், பைக் மீது மோதியதாகத் தெரிகிறது.
    இந்த விபத்தில் ஞானசேகரன், ஜெயா, ஜெயவர்த்தினி ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்களை பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜெயா செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து, திருவண்ணாமலை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai