சுடச்சுட

    

    மறைந்த தேசியத் தலைவரின் பெயர்ப் பலகை அவமதிப்பு: கிராம மக்கள் சாலை மறியல்

    By DIN  |   Published on : 17th May 2017 07:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்கம் அருகே மறைந்த தேசியத் தலைவர் பெயரிலான மன்றத்தின் பெயர்ப் பலகையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    செங்கத்தை அடுத்த தானகவுண்டன்புதூர் பேருந்து நிலையத்தில் மறைந்த தேசியத் தலைவர் பெயரிலான மன்ற பெயர்ப் பலகை, கொடிக்கம்பம் உள்ளன. இந்தப் பெயர்ப் பலகையையும், கொடிக்கம்பத்தையும் திங்கள்கிழமை இரவு மர்ம நபர்கள் அவமதித்துச் சென்றுள்ளனர்.
    இதனை பார்த்த அந்தக் கிராம மக்கள், மன்றத்தின் பெயர்ப் பலகை, கொடிக்கம்பம் ஆகியவற்றை அவதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, செவ்வாய்க்கிழமை காலை அங்குள்ள திருவண்ணாமலை - செங்கம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
    தகவலறிந்த திருவண்ணாமலை கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி, வட்டாட்சியர் உதயகுமார், காவல் துணைக் கண்காணிப்பாளர் ஷாஜித்தா மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    இதனிடையே, சுமார் 2 மணி நேரமாக நடைபெற்ற மறியலால் திருவண்ணாமலை - செங்கம் தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றன. பின்னர், இறையூர், புதுப்பாளையம், செங்கம் வழியாக போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. இதையடுத்து, மன்றத்தின் பெயர்ப் பலகை, கொடிக்கம்பத்தை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai