சுடச்சுட

  

  திருவண்ணாமலை மாவட்டத்தில் மின்னணு குடும்ப அட்டையில் குடும்ப அட்டைதாரர்கள் திருத்தம் செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
  திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக மின்னணு குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் விடுபட்டுள்ள விவரங்கள் குறித்த குடும்ப அட்டைதாரர்களின் பட்டியல் சம்பந்தப்பட்ட கூட்டுறவு நியாய விலைக் கடை, வட்ட வழங்கல் அலுவலர் அலுவலத்தில் வைக்கப்பட்டுள்ளன.
  எனவே, குடும்பத் தலைவரின் பெயர், தந்தை பெயர், கணவர் பெயர், முகவரி, பிறந்த தேதி, புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடை விற்பனையாளரை அணுகி குடும்ப அட்டைதாரர்கள் தெரிவிக்கலாம். மேலும், உரிய ஆவணங்களையும் ஒப்படைக்கலாம்.
  மேலும், w‌w‌w.‌t‌n‌p‌d‌s.c‌o‌m,​​ ‌w‌w‌w.‌t‌n‌p‌d‌s.‌g‌o‌v.‌i‌n​  என்ற இணையதளங்களைப் பயன்படுத்தியும் சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரரே மாற்றம் செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai