சுடச்சுட

  

  அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை வரன்முறைப்படுத்த ஆட்சியர் அழைப்பு

  By DIN  |   Published on : 18th May 2017 08:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலை மாவட்டத்தில் அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை 6 மாதங்களுக்குள் வரன்முறைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே கேட்டுக்கொண்டார்.
  திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர் ஊரமைப்புத் துறையின் முன் அனுமதி பெறாத அனுமதியற்ற வீட்டு மனைப்பிரிவுகள், அவற்றில் அமைந்துள்ள வீட்டு மனைகளை வரன்முறைப்படுத்த தமிழக அரசால் 2017 மே 4-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.
  இந்த அரசாணையின்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் அங்கீகாரமில்லாத மனைப்பிரிவுகளின் உரிமையாளர்கள், அங்கீகாரமில்லாத வீட்டுமனைப் பிரிவில் உள்ள வீட்டுமனைகளின் உரிமையாளர்கள் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை அணுகி பயன்பெறலாம்.
  மேலும், இணையதளம் மூலம் 6 மாதங்களுக்குள் முழுமையான விவரங்களுடன் விண்ணப்பித்து தங்களது வீட்டு மனைகளை வரன்முறைபடுத்தி உரிய அங்கீகாரம் பெற்றுக் கொள்ளலாம். 2016 அக்டோபர் 20-ஆம் தேதிக்கு முன்பு வரை அமைக்கப்பட்ட அங்கீகாரம் இல்லாத மனைப் பிரிவுகளில் அமையும் வீட்டு மனைகளை பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
  மேலும், ஏற்கெனவே பதிவு செய்து வாங்கிய மனைகளை மறு விற்பனை செய்ய இயலாத நிலையும் உள்ளது. இந்தச் சூழ்நிலையில், பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி பயன் பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai