Enable Javscript for better performance
காவிரி மேலாண்மை வாரியம் கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 18th May 2017 08:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியத்தை தாமதமின்றி அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை தாமதமின்றி அமைக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்து தமிழக மாணவர்களின் கல்வி உரிமையை நிலைநாட்ட வேண்டும். நியாயவிலைக் கடைகளில் உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருள்களை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    இதில், கட்சி நிர்வாகிகள் சி.அப்பாசாமி, பெ.கண்ணன், சிவப்பிரகாசம், ரிஷபதாஸ், ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai