Enable Javscript for better performance
செங்கம் வட்ட தமிழ்ச் சங்க இலக்கியக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    செங்கம் வட்ட தமிழ்ச் சங்கம் சார்பில், இலக்கியக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    தனியார் பள்ளியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு தமிழ்ச் சங்க இணைச் செயலர் உதயசங்கர் தலைமை வகித்தார். ஆசிரியை அரசிகிருபாகரன், அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியை இந்திரா காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னூர்மங்கலம் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் பழநி வரவேற்றார்.
    செங்கம் வட்ட தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து தமிழ்ச் சங்கத் தலைவர் தனஞ்செயன் விளக்கிப் பேசினார். இதைத் தொடர்ந்து, கவிஞர் ராமலிங்கஜோதி, கவிதைகள் கூறும் கவிமணிகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
    கூட்டத்தில், ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி மாணிக்கம், அரசுப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, தேமுதிக முன்னாள் நகரச் செயலர் அசோக்குமார், தலைமை ஆசிரியர்கள் குணசீலபூபதி, இராதாகிருஷ்ணன், செல்வநாதன் மற்றும் தமிழ்ச் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியின் நகரச் செயலர் ஆசைமுசிர்அகமத் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai