சுடச்சுட

    

    வந்தவாசியை அடுத்த தெள்ளாறு வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், தேசிய டெங்கு விழிப்புணர்வு தின நிகழ்ச்சி தெள்ளாறில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு தெள்ளாறு வட்டார மருத்துவ அலுவலர் கே.செல்வமுத்துகுமாரசாமி தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் கோதண்டராமன் வரவேற்றார். தெள்ளாறு காவல் ஆய்வாளர் டி.முரளிசுந்தரம், டெங்கு விழிப்புணர்வு குறித்த கண்காட்சியை தொடக்கி வைத்துப் பேசினார்.
    பின்னர், டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் கிராம முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. அப்போது, டெங்கு விழிப்புணர்வு குறித்த துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. மேலும், இதுகுறித்த ஸ்டிக்கர்கள் ஆட்டோக்களில் ஒட்டப்பட்டன. இதையடுத்து, பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கஜேந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் பாஸ்கரன், முனீர்அகமது, பி.கணேஷ்குமார், டி.அருள்பாண்டியன், மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai