சுடச்சுட

    

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி திருவண்ணாமலையில் அரசு அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 18th May 2017 08:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி, திருவண்ணாமலையில் அரசு அலுவலர்கள் புதன்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்டத் தலைவர் இரா.செல்வபாண்டியன் தலைமை வகித்தார்.
    தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படைப் பணியாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.வாசுமூர்த்தி, தமிழ்நாடு அரசுத் துறை ஊர்தி ஓட்டுநர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்டச் செயலர் என்.மாசிலாமணி வரவேற்றார்.
    தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.சரவணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார்.
    தமிழ்நாடு வருவாய்த் துறை குரூப் - 2 நேரடி நியமன அலுவலர் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் டி.கிருஷ்ணமூர்த்தி, மாநில இணைச் செயலர் கவுரி, மாவட்டத் தலைவர் ஆனந்தகுமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
    ஆர்ப்பாட்டத்தில், புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கான 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.
    தமிழக அரசின் தலைமைச் செயலகம் உள்பட அனைத்துத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். அனைத்து அரசுத் துறைகளுக்கும் வாகன வசதி வழங்க வேண்டும். ஓட்டுநர் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப வேண்டும்.
    அரசு ஊழியர்களுக்கான தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும். பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பு காலமுறை, தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி பெறும் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    இதில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படைப் பணியாளர்கள் மாநில மைய சங்கம், தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்கம் மற்றும் இணைப்புச் சங்கங்களின் மாநில, மாவட்ட, வட்டக் கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai