சுடச்சுட

    

    செய்யாறு அருகே மது போதையில் தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
    வேலூர் மாவட்டம், ஆற்காட்டை அடுத்த சென்னசமுத்திரம் கிராமம், ரோட்டுத் தெருவைச் சேர்ந்தவர் குமார் (46). இவர், கடந்த 12-ஆம் தேதி செய்யாறை அடுத்த பெரூங்கட்டூர் கிராமத்தில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்தார்.
    மது போதையில் இருந்த குமார், அந்தக் கிராமத்தில் உள்ள
    ஆஞ்சநேயர் கோயில் அருகேயுள்ள சிறுபாலத்தின் மீது தூங்கியபோது தவறி விழுந்து பலத்த காயமடைந்தார்.
    பின்னர், அவர் மீட்கப்பட்டு, வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குமார், அங்கு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
    இதுகுறித்து அவரது தம்பி ராஜா அளித்த புகாரின்பேரில், மோரணம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தியாகசெம்மல் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai