மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
By DIN | Published on : 18th May 2017 05:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
நியாயவிலைக் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, தண்டராம்பட்டை அடுத்த வானாபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வானாபுரம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் வட்டச் செயலர் அண்ணாமலை தலைமை வகித்தார்.
நிர்வாகிகள் ஜனார்த்தனன், வெங்கட்ராமன், காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் சிவக்குமார், ஆர்ப்பாட்டத்தை விளக்கிப் பேசினார்.
நியாய விலைக் கடைகளில் எடை குறைவாக பொருள்கள் வழங்குவதைத் தடுக்க வேண்டும்.
வெளிச் சந்தையில் நியாய விலைக் கடைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க வேண்டும்.
நியாய விலைக் கடைகளில் தனிநபர்கள் பணிபுரிவதை தடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தகவலறிந்த தண்டராம்பட்டு ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர் பாக்கியராஜ் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து, ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.