சுடச்சுட

  

  மேற்கு ஆரணி வட்டத்தில் ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி

  By DIN  |   Published on : 18th May 2017 08:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மேற்கு ஆரணி வட்டத்தில் உள்ள பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
  இதுகுறித்து, மேற்கு ஆரணி வேளாண்மை உதவி இயக்குநர் செ.சுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
  மேற்கு ஆரணி வட்டத்தில் பொதுப்பணித் துறை மூலம் பராமரிக்கப்படும் 25 ஏரிகளில் இருந்து வண்டல் மண் எடுத்து, விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த மாவட்ட ஆட்சியர் மூலம் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  எனவே, விவசாயிகள் தங்கள் ஊரில் அல்லது அருகாமையில் இருக்கும் ஊரில் உள்ள பொதுப்பணித் துறை ஏரிகளில் இருந்து மண் எடுக்க விண்ணப்பத்துடன், சிட்டா (அ) பட்டா இணைத்து வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், மேற்கு ஆரணி வேளாண்மை விரிவாக்க மையம், கண்ணமங்கலம் துணை வேளாண்மை விரிவாக்க மையம், தேவிகாபுரம் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் விண்ணப்பிக்கலாம்.
  விவசாய நிலத்தில் வண்டல் மண் இடுவதன் மூலம் மண் வளம் அதிகரிப்பதால், பயிர்களுக்கு இடும் உரத்தின் அளவு குறையும். மேலும், விவசாயிகள் தங்கள் கிராமத்திலுள்ள ஏரியில் வண்டல் மண் எடுப்பதன் மூலம் ஏரியின் நீர்த்தேக்க அளவு அதிகரிப்பதோடு, ஏரி மூலம் பாசன வசதி பெறும் விவசாய நிலத்தின் பரப்பு அதிகரிக்கிறது. மேலும், நிலத்தடி நீர் மட்டமும் உயர வழிவகை ஏற்படுகிறது. எனவே, விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் நிலத்தின் வளத்தை பெருக்கிக்கொள்ள வேண்டும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai