சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் வெள்ளிக்கிழமை ஜமாபந்தி தொடங்குகிறது.
    ஒவ்வோர் ஆண்டும் வருவாய் தீர்வாய கணக்குகளை சரிபார்க்கும் வகையிலான ஜமாபந்தி அனைத்து வட்டங்களிலும் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான ஜமாபந்தி வெள்ளிக்கிழமை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் தொடங்குகிறது.
    இந்த ஜமாபந்தியில் வருவாய் தீர்வாய கணக்குகள் சரிபார்க்கப்படும். பொதுமக்களிடம் இருந்து வருவாய்த் துறை தொடர்பான கோரிக்கைகள், குறைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டு, விரைவான நடவடிக்கை எடுக்கப்படும்.
    அதன்படி, வந்தவாசி வட்டத்தில் மே 19 முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெறும் ஜமாபந்திக்கு மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தலைமை வகிக்கிறார். போளூர் வட்டத்தில் மே 19 முதல் 26-ஆம் தேதி வரை நடைபெறும் ஜமாபந்திக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி தலைமை வகிக்கிறார்.
    இதேபோல, ஆரணி வட்டத்தில் செய்யாறு சார் - ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் மே 25-ஆம் தேதி வரையும், கலசப்பாக்கம் வட்டத்தில் செய்யாறு சிப்காட் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மே 23-ஆம் தேதி வரையும், கீழ்பென்னாத்தூர் வட்டத்தில் கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி தலைமையில் மே 23-ஆம் தேதி வரையும், சேத்துப்பட்டு வட்டத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) சுப்பிரமணி தலைமையில் மே 24-ஆம் தேதி வரையும், வெம்பாக்கம் வட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் சாவித்திரி தலைமையில் மே 25-ஆம் தேதி வரையும் ஜமாபந்தி நடைபெறுகிறது.
    மேலும், செய்யாறு வட்டத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் ஜோதி தலைமையில் மே 30-ஆம் தேதி வரையும், தண்டராம்பட்டு வட்டத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தண்டபாணி தலைமையில் மே 23-ஆம் தேதி வரையும், திருவண்ணாமலை வட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ப.சுப்பிரமணியன் தலைமையில் மே 29-ஆம் தேதி வரையும், செங்கம் வட்டத்தில் மாவட்ட கலால் உதவி ஆணையர் எஸ்.பானு தலைமையில் மே 25-ஆம் தேதி வரையும் ஜமாபந்தி நடைபெறுகிறது.
    இதையொட்டி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கம்போல நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டங்கள், விவசாயிகள் குறைதீர் கூட்டங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான குறைதீர் கூட்டங்களும் ஜூன் 1-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai