சுடச்சுட

  

  திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் செவ்வாய்க்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
  திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்துக்கு சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் வந்தார். ஒரு பேருந்தில் ஏற முயன்ற அவர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸார், முதியவரின் சடலத்தை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  அங்கு முதியவரின் சடலத்தை பரிசோதித்த மருத்துவர்கள், வெயில் தாக்கத்தை தாங்க முடியாமல் அவர் மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என்று தெரிவித்தனர். இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிந்து இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai