சுடச்சுட

    

    தண்டராம்பட்டு அருகே குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியல்

    By DIN  |   Published on : 19th May 2017 08:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தண்டராம்பட்டு அருகே குடிநீர் வழங்கக் கோரி, கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    தண்டராம்பட்டு அருகே உள்ள தே.ஆண்டாப்பட்டு கிராமம், கே.கே.நகரில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு கடந்த 6 மாதங்களாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம்.
    இதுகுறித்து, தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
    இதனால், பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு வியாழக்கிழமை தண்டராம்பட்டு - அரூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
    தகவலறிந்து வந்த தானிப்பாடி போலீஸார், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இரு தினங்களில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனையடுத்து, சாலை மறியலைக் கைவிட்டு, பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்தச் சாலை மறியலால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai