சுடச்சுட

    

    முதல் 3 இடங்களை வெளியிடக் கூடாது: பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் எச்சரிக்கை

    By DIN  |   Published on : 19th May 2017 05:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 12, 10-ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களின் பட்டியலை வெளியிடக் கூடாது என, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் எச்சரித்தார்.
    தமிழகத்தில் 12, 10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் மாநில, மாவட்ட, பள்ளி அளவில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களின் பட்டியலை வெளியிடக் கூடாது என்று அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையை திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகள் கடைப்பிடிக்க வேண்டும்.
    அதன்படி, முதல் 3 இடங்களை வெளியிட்டு விளம்பரம் செய்வதை மாவட்டத்தின் அனைத்து தனியார் பள்ளிகளும் கைவிட வேண்டும். மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் எச்சரித்தார்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai