சுடச்சுட

    

    ஆரணி பகுதி பள்ளிகளின் பத்தாம் வகுப்பு தேர்ச்சி விவரம்

    By DIN  |   Published on : 20th May 2017 06:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆரணி ஏ.சி.எஸ் மெட்ரிக் பள்ளி, எய்ம் மெட்ரிக் பள்ளி, ஸ்ரீபாலவித்யாமந்திர் மெட்ரிக் பள்ளி ஆகிய பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றன. அவற்றின் விவரம் வருமாறு:
    ஆரணி ஏ.சி.எஸ் மெட்ரிக் பள்ளி: ஆரணி ஏ.சி.எஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 151 மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று, பள்ளிக்கு 100 சதவீதத் தேர்ச்சியை பெற்றுத் தந்துள்ளனர். இவர்களில், எஸ்.சுஷ்மிதா 495, பி.அருண் 492, ஆர்.ஹேமாவதி, பி.ஸ்ரீமதி, எஸ்.சந்துரு ஆகியோர் 491 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்தனர்.
    மேலும், 490 மதிப்பெண்களுக்கு மேல் 9 மாணவர்களும், 450 முதல் 490 மதிப்பெண்களுக்குள் 70 மாணவர்களும், 400 மேல் 450 மதிப்பெண்களுக்குள் 39 மாணவர்களும் பெற்றனர். சிறப்பிடம் பிடித்த மாணவர்களையும், தேர்ச்சி பெற்றவர்களையும் பள்ளிச் செயலர் ஏ.சி.பாபு, முதல்வர் செலின்திலகவதி ஆகியோர் பாராட்டினர்.
    ஆரணி எய்ம் மெட்ரிக் பள்ளி: ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் உள்ள எய்ம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 171 மாணவர்களும் தேர்ச்சி பெற்று, பள்ளிக்கு 100 சதவீதத் தேர்ச்சியை பெற்றுத் தந்துள்ளனர்.
    இவர்களில், கே.ஷாலினி 496, வி.பிரசன்னா 493, ஆர்.விஷ்வேஷ் 492 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்தனர். மேலும், 490 மதிப்பெண்களுக்கு மேல் 7 மாணவர்களும், 480-க்கு மேல் 21 மாணவர்களும், 450-க்கு மேல் 53 மாணவர்களும், 400-க்கும் மேல் 145 மாணவர்களும் பெற்றனர்.
    வெற்றி பெற்ற மாணவர்களையும், தேச்சி பெற்ற மாணவர்களையும் பள்ளி நிர்வாகத் தலைவர் எம்.மூர்த்தி, துணைத் தலைவர் வி.மகேஷ், தாளாளர் எம்.ஆர்.ரமேஷ், பொருளாளர் ஏ.சீனிவாசன் மற்றும் இயக்குநர்கள் பாராட்டினர்.
    ஆரணி ஸ்ரீபாலவித்யாமந்திர் மெட்ரிக் பள்ளி: ஆரணி ஸ்ரீபாலவித்யாமந்திர் மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதிய 17 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இது 100 சதவீதத் தேர்ச்சியாகும். மாணவர்கள் ஜெ.ரித்திக், ஜி.கிருத்திகா ஆகியோர் 480, என்.கிருபாலனி 475, எஸ்.திவ்யா 463 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்தனர். மேலும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 8 பேரும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 5 பேரும் பெற்றனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai