சுடச்சுட

  

  திருவண்ணாமலை மாவட்டத்தில் கலந்தாய்வு மூலம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு பணியிட மாறுதல்

  By DIN  |   Published on : 20th May 2017 06:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலை மாவட்ட கல்வித் துறையில் பணிபுரியும் 10 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வு மூலம் வெவ்வேறு ஊராட்சி ஒன்றியங்களுக்கு பணியிட மாறுதல் பெற்றனர்.
  திருவண்ணாமலை மாவட்ட தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பணி நிரவல், பணி மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. திருவண்ணாமலை டி.எம்.டவுன் தொடக்கப் பள்ளியில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஏ.ராஜேந்திரன் தலைமையில், இணையதளம் மூலம் வரும் 30-ஆம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடைபெறுகிறது.
  முதல் நாளான வெள்ளிக்கிழமை காலை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. இந்தக் கலந்தாய்வில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரியும் 22 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் 10 பேர் பணியிட மாறுதல் பெற்றனர்.
  இட மாறுதல் பெற்றவர்கள் விவரம்: அதன்படி, சேத்பட் ஊராட்சி ஒன்றிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஷகிலா, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணியிட மாறுதல் பெற்றார். இதேபோல, மேற்கு ஆரணி ஒன்றிய கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சுந்தர், கலசப்பாக்கம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலராகவும், திருவண்ணாமலை ரேணுகாதேவி, தருமபுரி மாவட்டம், அரூருக்கும் பணியிட மாறுதல் பெற்றனர்.
  பெரணமல்லூர் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாதேஸ்வரி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரைக்கும், செங்கம் லோகநாயகி, சேத்பட் ஒன்றியத்துக்கும், கலசப்பாக்கம் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஆறுமுகம், சேத்பட் ஒன்றிய கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலராகவும் பணியிட மாறுதல் பெற்றனர்.
  மேலும், தெள்ளாறு ஒன்றிய கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ரங்கநாதன், அனக்காவூர் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலராகவும், செய்யாறு ஒன்றிய கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கமலக்கண்ணன், மேற்கு ஆரணி ஒன்றிய கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலராகவும், தண்டராம்பட்டு எல்.ராஜகோபால், தெள்ளாறு ஒன்றியத்துக்கும், செய்யாறு ஏ.சுப்பிரமணியம், கலசப்பாக்கம் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலராகவும் பணியிட மாறுதல் பெற்றனர்.
  இணையதள கலந்தாய்வில் பணியிட மாறுதல் பெற்ற 10 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஏ.ராஜேந்திரன் பணியிட மாறுதல் ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலக கண்காணிப்பாளர் பிரகாஷ் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
  மே 22-ல் அடுத்த கலந்தாய்வு: வரும் திங்கள்கிழமை (மே 22) முற்பகல் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு, நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்துக்குள்), பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டத்துக்குள் ஒன்றியம் விட்டு ஒன்றியம்) ஆகியவை நடைபெறுகிறது என்று மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஏ.ராஜேந்திரன் தெரிவித்தார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai