சுடச்சுட

    

    ஸ்ரீராமஜெயம் மெட்ரிக் பள்ளி 100 சதவீதத் தேர்ச்சி
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் போளூர் ஸ்ரீராமஜெயம் மெட்ரிக் பள்ளி 100 சதவீதத் தேர்ச்சி பெற்றது.
    இந்தப் பள்ளியில் 88 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இது 100 சதவீதத் தேர்ச்சியாகும். மாணவிகள் ஹேனாபிரின்சி 495, பவித்ரா 490, மேனகா மற்றும் விஷ்ணுபிரியா 489 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்தனர். மேலும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 29 மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர்.
    இந்நிலையில், சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளையும், தேர்ச்சி பெற்றோரையும் பள்ளித் தாளாளர் சி.ஏழுமலை இனிப்பு வழங்கிப் பாராட்டினார். பள்ளி முதல்வர் அகிலா மற்றும் ஆசிரியர்கள் உடனிந்தனர்.

    ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி 100 சதவீதத் தேர்ச்சி
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் செங்கம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளது.
    இந்தப் பள்ளியில் மொத்தம் 52 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று, பள்ளிக்கு 100 சதவீதத் தேர்ச்சியை பெற்றுத்தந்துள்ளனர்.
    இந்நிலையில், சிறப்பிடம் பெற்ற மாணவி பிரியதர்ஷினியை பள்ளித் தலைவர் எஸ்.பாண்டுரங்கன், இனிப்புகள் வழங்கிப் பாராட்டினார். செயலர் எஸ்.ராமமூர்த்தி, முதல்வர் ஏழுமலை, தலைமை ஆசிரியர் கமால்பாஷா மற்றும் ஆசிரியர்கள் பலர் உடனிருந்தனர். இந்தப் பள்ளி தொடர்ந்து 22-ஆவது ஆண்டாக 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளது.


    டவுன் மெட்ரிக் பள்ளி 100 சதவீதத் தேர்ச்சி
    பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் போளூரில் உள்ள டவுன் மெட்ரிக் பள்ளி 100 சதவீதத் தேர்ச்சி பெற்றது.
    இந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதிய 12 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்று, பள்ளிக்கு 100 சதவீதத் தேர்ச்சியை பெற்றுத்தந்துள்ளனர். மாணவர்கள் ராஜ்குமார் 490, தமிழ்மகன் 458, ஜெகதீஷ் 400 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றனர்.
    இந்நிலையில், சிறப்பிடம் பெற்ற மாணவர்களையும், தேர்ச்சி பெற்றவர்களையும் பள்ளி நிர்வாகி வாசு மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai