சுடச்சுட

    

    கல்வி வளர்ச்சியில் சிறந்த பள்ளியாக மேட்டுஎச்சூர் அரசு உயர்நிலைப் பள்ளி தேர்வு: ரூ.75 ஆயிரம் ஊக்கப் பரிசு அளிப்பு

    By DIN  |   Published on : 21st May 2017 01:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டத்திலேயே கல்வி வளர்ச்சியில் சிறந்த பள்ளியாக மேட்டு எச்சூர் அரசு உயர்நிலைப் பள்ளி தேர்வு செய்யப்பட்டு, அந்தப் பள்ளிக்கு ஊக்கப் பரிசாக ரூ.75 ஆயிரமும், சான்றும் அண்மையில் வழங்கப்பட்டன.
    தமிழக அரசு கல்வித் துறை சார்பில், ஆண்டுதோறும் காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15-ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, 2016 - 2017ஆம் கல்வியாண்டில் கல்வி வளர்ச்சியில் திருவண்ணாமலை மாவட்டத்திலேயே சிறப்பாக செயல்பட்டதற்காக செய்யாறை அடுத்த மேட்டு எச்சர் அரசு உயர்நிலைப் பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டது.
    இந்நிலையில், இந்தப் பள்ளிக்கு அரசு சார்பில் வழங்கப்படும் ஊக்கப் பரிசு ரூ.75 ஆயிரம், சான்று ஆகியவற்றை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் ஆகியோர் பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.மார்கபந்துவிடம் அண்மையில் வழங்கி பாராட்டினர்.
    கடந்த 2006-ல் தொடங்கப்பட்டு மேட்டு எச்சூர் அரசு உயர்நிலைப் பள்ளி, தொடர்ந்து 10 ஆண்டுகளாக 92 சதவீதத் தேர்ச்சி பெற்று வருகிறது. 2016 - 17ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்தப் பள்ளி 93 சதவீதத் தேர்ச்சி பெற்றது. மேலும், இந்தப் பள்ளி மாணவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு குழு மற்றும் தடகள விளையாட்டுப் போட்டிகளிலும், செஸ் போட்டியிலும் மாவட்ட, வட்ட அளவில் வெற்றி பெற்று பரிசுகளை வென்றுள்ளனர்.
    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல் பாடத்தில் கடந்த 5 ஆண்டுகளாக 100 சதவீதத் தேர்ச்சியை இந்தப் பள்ளி பெற்று வருகிறது. மேலும், ஆங்கில வழிக் கல்வியில் 2016 - 17ஆம் கல்வியாண்டில் 6-ஆம் வகுப்பு தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி வளாகத்தில் சுமார் 500 தேக்கு மரக்கன்றுகள் நடப்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai