சுடச்சுட

    

    காவல், தீயணைப்புத் துறை எழுத்துத் தேர்வு: 25 மையங்களில் 21 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்

    By DIN  |   Published on : 21st May 2017 01:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 25 தேர்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை காவல் துறை, தீயணைப்புத் துறைக்கான எழுத்துத் தேர்வை 21 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.
    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் காவல் துறையில் காலியாக உள்ள 4,569 இரண்டாம் நிலை காவலர், ஆயுதப்படையில் காலியாக உள்ள 4,627 இரண்டாம் நிலை காவலர், சிறைத் துறையில் காலியாக உள்ள 976 இரண்டாம் நிலை காவலர், தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள 1,512 பணியிடங்கள் என மொத்தம் 15 ஆயிரத்து 711 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
    இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. அதன்படி, திருவண்ணாமலையில் சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அருணை பொறியியல் கல்லூரி, சிஷ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி என மொத்தம் 25 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 21 ஆயிரத்து 200 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    தேர்வு மையங்களில் ஆய்வு: இதற்கிடையே, சிறைத் துறை டிஐஜி முகமது அனீபா சனிக்கிழமை திருவண்ணாமலைக்கு வந்தார்.
    அவர், தேர்வு நடைபெறும் மையங்களில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ம.ரங்கராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai