சுடச்சுட

    

    கைத்தறி நெசவாளர்களுக்கு தொழில் திறன் அங்கீகார மதிப்பீடு சான்றிதழ் வழங்கும் விழா

    By DIN  |   Published on : 21st May 2017 01:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆரணியில் 1,400 நெசவாளர்களுக்கு பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தொழில் திறன் அங்கீகார மதிப்பீடு சான்றிதழ் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பாரம்பரிய தொழில் திறனை அங்கீகரித்து மதிப்பீடு செய்யும் பயிற்சி ஆரணியில் நெசவாளர்களுக்கு 3 கட்டமாக அளிக்கப்பட்டது. இதில், பயிற்சி முடித்த 1,400 நெசவாளர்களுக்கு ஆரணி தனியார் மஹாலில் பட்டு பூங்கா சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நல்லிகுப்புசாமி செட்டியார் சான்றிதழ்களை வழங்கிப் பேசுகையில், கைத்தறி பட்டு நெசவு என்பது பாரம்பரியமிக்கது. இந்த நெசவு தொழிலை வரும் தலைமுறைக்கும் கற்றுக்கொடுங்கள் என்றார்.
    இதில், முதல் கட்டமாக 1,400 நெசவாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. 2020-க்குள் 20 ஆயிரம் நெசவாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க முடிவு செய்துள்ளனர். விழாவில் சென்னை குமரன் சில்க்ஸ் நிர்வாக இயக்குநர் பி.சி.ஜெயராமசெட்டியார், ஆர்.எம்.கே.வி நிர்வாக இயக்குநர் கே.சிவக்குமார், போத்தீஸ் நிர்வாக இயக்குநர் எஸ்.ரமேஷ், மத்திய பட்டு வாரிய விஞ்ஞானி கே.எம்.அப்துல்காதர், முன்னாள் இயக்குநர் ஆர்.ஜி.பன்னீர்செல்வம், ஆரணியைச் சேர்ந்த பட்டுச் சேலை உற்பத்தியாளர்கள் இ.செல்வன், எம்.ஏ.சந்திரசேகர், டி.எச்.குருராஜாராவ், ஆர்.சிவக்குமார், டி.ராமலிங்கம், பட்டு பூங்கா இயக்குநர்கள் கே.வி.குமார், என்.சண்முகம், ஜெயராஜசிவம், ரகுபதிராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai