சுடச்சுட

    

    போளூரை அடுத்த செல்வம்பேட்டையில் சனிக்கிழமை மாலை வீசிய சூறைக்காற்றில் சாலையோரம் இருந்த 100 ஆண்டுகள் பழைமைவாய்ந்த புளிய மரம் அருகில் இருந்த வீட்டின் மீது சாய்ந்தது.
    போளூர் பகுதியில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில், கடந்த 2 நாள்களாக இந்தப் பகுதியில் பலத்த காற்றுடன், மழை பெய்து வருகிறது. இதேபோல, சனிக்கிழமை மாலை கடுமையான சூறைக்காற்றுடன், மழை பெய்தது.
    அப்போது, வெண்மணி ஊராட்சியைச் சேர்ந்த செல்வம்பேட்டையில் போளூர் - சேத்துப்பட்டு சாலையில் இருந்த 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புளிய மரம் வேரோடு சாய்ந்து, அருகில் இருந்த வீட்டின் கூரை மீது விழுந்தது.
    அந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. எனினும், அருகில் இருந்த மின் கம்பத்தின் வயர் மீது புளிய மரம் சாய்ந்ததால், அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai