சுடச்சுட

    

    சேத்துப்பட்டு திவ்யா மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

    By DIN  |   Published on : 21st May 2017 01:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்ற சேத்துப்பட்டு திவ்யா மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு தாளாளர் பா.செல்வராசன் இனிப்பு வழங்கி, பாராட்டுத் தெரிவித்தார்.
    சேத்துப்பட்டு - செஞ்சி சாலையில் உள்ள திவ்யா மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவிகள் சுபஸ்ரீ 494, நந்தினி, மகேஸ்வரி ஆகியோர் தலா 489, கற்பகபிரியா 484 மதிப்பெண்கள் பெற்று, சிறப்பிடம் பிடித்தனர்.
    மேலும், 475 மதிப்பெண்களுக்கு மேல் 7 பேரும், 450 - 475 மதிப்பெண்களுக்குள் 17 பேரும், 425 - 450 மதிப்பெண்களுக்குள் 17 பேரும், 400 - 425 மதிப்பெண்களுக்குள் 17 பேரும் பெற்று தேர்ச்சி பெற்றனர்.
    இந்நிலையில், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவி சுபஸ்ரீயையும், தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் தாளாளர் பா.செல்வராசன் இனிப்பு வழங்கி, பாராட்டினார். மேலும், செயலர் டாக்டர் செந்தில்குமார், துணைத் தலைவர் பிரவின்குமார், நிர்வாக அலுவலர் சீனிவாசராகவன், ஒருங்கிணைப்பாளர் பிரதாபன், முதல்வர் முரளிதரன் ஆகியோர் மாணவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai