சுடச்சுட

    

    திருவண்ணாமலையில் தச்சுத் தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் தங்க நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
    திருவண்ணாமலை, மண்ணம்மாள் நகரைச் சேர்ந்தவர் பரத்குமார் (29). தச்சுத் தொழிலாளியான இவர், சில தினங்களுக்கு முன்பு சொந்த வேலையாக சென்னை சென்றார். பரத்குமாரின் மனைவி ரேவதி, வீட்டை பூட்டிவிட்டு குழந்தையுடன் செங்கத்தை அடுத்த தானாகவுண்டன் புதூரில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றார்.
    திருவண்ணாமலை, தென்றல் நகரில் வசிக்கும் பரத்குமாரின் தந்தை ஜோதி சனிக்கிழமை பரத்குமாரின் வீட்டுக்கு வந்தார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து அதிலிருந்த 20 பவுன் தங்க நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
    இதுகுறித்து, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai