சுடச்சுட

    

    வேட்டவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொழு நோய் ஊன தடுப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
    முகாமுக்கு தொழு நோய் பிரிவு துணை இயக்குநர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர்கள் சரவணன், கிரிஜா, மருத்துவ அலுவலர் மோனிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். டேமியன் பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர் நரேஷ்குமார், முட நீக்கு வல்லுநர் நிர்மலா, மருத்துவமில்லா மேற்பார்வையாளர் ரமேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ஊன தடுப்பு பயிற்சி அளித்தனர்.
    மேலும், தொழுநோய் ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்கள் உடல் உறுப்பு ஊனம் ஏற்படாதவாறு சிகிச்சை மேற்கொள்வது எப்படி என்பது குறித்தும், சுய பாதுகாப்புப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இதில், தொழு நோயாளிகளுக்கு எம்.சி.ஆர். காலணிகள், மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.
    முகாமில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வெள்ளையன், சுகாதார ஆய்வாளர்கள் சந்திரசேகரன், தசரதன், அசோகன், பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai