சுடச்சுட

    

    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு

    By DIN  |   Published on : 21st May 2017 01:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், கீழ்பென்னாத்தூர் பகுதி அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
    கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 107 மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இவர்களில் 97 பேர் தேர்ச்சி பெற்றனர்.
    இது 91 சதவீதத் தேர்ச்சியாகும். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி வீதம் 9 சதவீதம் உயர்ந்துள்ளதாக பள்ளித் தலைமை ஆசிரியர் ராமமூர்த்தி தெரிவித்தார்.
    கீழ்பென்னாத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 134 மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில் 116 பேர் தேர்ச்சி பெற்றனர்.
    இது 87 சதவீதத் தேர்ச்சி என்று பள்ளித் தலைமை ஆசிரியை மலர்விழி தெரிவித்தார்.
    கீழ்பென்னாத்தூரை அடுத்த மேக்களூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 54 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில் 49 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 91 சதவீத தேர்ச்சி என்று பள்ளித் தலைமை ஆசிரியர் டி.குமார் தெரிவித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai