சுடச்சுட

    

    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் செங்கம் பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதத் தேர்ச்சி பெற்றது.
    செங்கம் மில்லத்நகர் பகுதியில் உள்ள பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று, பள்ளிக்கு 100 சதவீதத் தேர்ச்சியை பெற்றுத் தந்துள்ளனர். மாணவிகள் ஆயிஷாசித்திகா, பிரியா, சினேகா ஆகியோர் சிறப்பிடம் பெற்றனர்.
    மேலும், 490-க்கு மேல் 2 பேரும், 480-க்கு மேல் 6 பேரும், 475-க்கு மேல் 9 பேரும், 450-க்கு மேல் 22 பேரும், 400-க்கு மேல் 40 மாணவர்களும் மதிப்பெண்கள் பெற்றனர்.
    சிறப்பிடம் பெற்ற மாணவர்களையும், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களையும் பள்ளித் தலைவர், செயலர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி பாராட்டினர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai