Enable Javscript for better performance
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் வந்தவாசியை அடுத்த மங்கலம் மாமண்டூர் - கீழ்க்கொடுங்காலூர் கூட்டுச் சாலையில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
    அனைவருக்கும் பொது விநியோகத் திட்ட பொருள்களை வழங்க வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும், வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு உரிய விலை வழங்க வேண்டும், கிராமங்களில் நிலவும் குடிநீர் பிரச்னையை உடனடியாக தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
    ஆர்ப்பாட்டத்துக்கு வட்டாரச் செயலர் பெ.அரிதாசு தலைமை வகித்தார். வட்டாரக் குழு உறுப்பினர்கள் இரா.இராமகிருஷ்ணன், கெ.முனியன், கா.யாசர்அராபத், கிளைச் செயலர்கள் அ.அப்துல்காதர், க.சண்முகம், சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai