சுடச்சுட

    

    விஸ்டம் வித்யாஷ்ரம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

    By DIN  |   Published on : 21st May 2017 01:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் செய்யாறு விஸ்டம் வித்யாஷ்ரம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்று, கல்வி மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றனர்.
    இந்தப் பள்ளியில் 123 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதில் 121 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மேலும், 450-க்கு மேல் 62 பேரும், 400-க்கு மேல் 83 பேரும், பல்வேறு பாடங்களில் பல மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்களும் பெற்றனர். 80 சதவீத மாணவர்கள் ஏ, பி கிரேடு பெற்றனர்.
    மாணவிகள் எஸ்.பிரியதர்ஷினி, எஸ்.யுவதர்ஷினி ஆகியோர் தலா 496 மதிப்பெண்களும், சி.சிவசங்கரி 495 மதிப்பெண்களும், எஸ்.பி.தீபிகா 493 மதிப்பெண்களும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளை விஸ்டம் கல்வி அறக்கட்டளைத் தலைவரும், மூத்த வழக்குரைஞருமான டி.ஜி.மணி, பள்ளி முதல்வர்கள் ஜி.மதியழகன், எஸ்.நந்தகுமரன், பாலதண்டாயுதபாணி, பிரின்ஸ்டன் இன்டர்நேஷனல் பள்ளி முதல்வர் டி.மணிவாசகம், துணை முதல்வர்கள் வி.அன்பழகன், யு.ஸ்ரீதேவி, எம்.வெங்கடேசன்,
    எஸ்.சரவணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai