சுடச்சுட

  

  ஆரணி ஆற்றுப்பாலம் அருகில் உள்ள அதிமுக மாவட்ட துணைச் செயலர் வீட்டில் சனிக்கிழமை நள்ளிரவு மர்ம நபர்கள் திருட முயற்சி செய்துள்ளனர்.
  ஆரணி ஆற்றுப்பாலம் அருகில் அதிமுக மாவட்ட துணைச் செயலர் டி.கருணாகரனின் வீடு உள்ளது. இவரது மனைவி ஆனந்தகுமாரி, முன்னாள் ஆரணி நகர்மன்ற துணைத் தலைவர்.
  இந்நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு இவரது வீட்டின் பின்புறமுள்ள ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்ததாகத் தெரிகிறது. பின்னர், வீட்டிலிருந்த பீரோவை உடைத்துள்ளனர். எனினும், அதில் துணிகளைத் தவிர தங்க, வெள்ளி நகைகள் எதுவும் இல்லாததால், துணிகளை கலைத்து விட்டுச் சென்றுள்ளனர்.
  காலையில் கருணாகரன் எழுந்து பார்த்தபோது, வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், இதுகுறித்து ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இதையடுத்து, போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai