Enable Javscript for better performance
இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த குடியாத்தம் நீச்சல் வீரர்- Dinamani

சுடச்சுட

    

    இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த குடியாத்தம் நீச்சல் வீரர்

    By DIN  |   Published on : 22nd May 2017 05:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடியாத்தம் நீச்சல் வீரர் பி.எஸ். சதீஷ்குமார், இந்திய சாதனை புத்தகத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம் பிடித்தார்.
    குடியாத்தத்தை அடுத்த மொரசபல்லி, ராமலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த பி.கே. சுதாகர் மகன் பி.எஸ். சதீஷ்குமார் (22). இவர் விஷாரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. படித்து வருகிறார்.
    இவர் குடியாத்தத்தை அடுத்த நத்தம் கிராமத்தில் உள்ள நீச்சல் குளத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் 8 மணி நேரம் நீரில் மிதந்து சாதனை படைத்தார்.
    இதையடுத்து இந்திய சாதனை புத்தகத்தில் இவர் இடம் பிடித்தார். புதுதில்லியில் உள்ள இந்திய சாதனை புத்தகத்தின் பொறுப்பாளர் விவேக்ராஜா இவருக்கு சான்றிதழும், கோப்பையும் வழங்கி பாராட்டினார்.
    கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் நீச்சல் குளத்தில் மிதக்கும் சாதனையில் உலக சாதனை படைக்க இவர் எண்ணியுள்ளார்.
    இவர் சில மாதங்களுக்கு முன் 6 மணி நேரம் நீரில் மிதந்து சாதனை படைத்தார். இவரது சாதனையை இவரே முறியடிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை 8 மணி நேரம் நீரில் மிதந்தார்.
    இதில் உலக சாதனை படைப்பதே தனது லட்சியம் என சதீஷ்குமார் தெரிவித்தார். சாதனை படைத்த மாணவரை ரோட்டரி மாவட்ட ஆளுநர் கே. ஜவரிலால் ஜெயின், கே.எம்.ஜி. கல்லூரிச் செயலர் கே.எம்.ஜி. ராஜேந்திரன், விஷாரம் குளோபல் பொறியியல் கல்லூரித் தலைவர் வி. ராம் பிரசாத், வட்டாட்சியர் பத்மநாபன் உள்ளிட்டோர் பாராட்டினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai