சுடச்சுட

  

  வந்தவாசியை அடுத்த இளங்காடு கிராமத்தில் உள்ள பாஞ்சாலியம்மன் தர்மராஜா கோயிலில் அக்னி வசந்த விழாவை ஒட்டி, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  இந்தக் கோயிலில் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் அக்னி வசந்த விழா தொடங்கியது. இதைத் தொடர்ந்து, வில் வளைப்பு, சித்திராங்கி மாலையிடு, சுபத்திரை மாலையிடு, அர்ச்சுனன் தபசு, கிருஷ்ணன் தூது, அரவான் களபலி, பீஷ்மர் சண்டை, அபிமன்யு சண்டை, கர்ண மோட்சம் ஆகிய தலைப்புகளில் மகாபாரதச் சொற்பொழிவு மற்றும் நாடகம் நடைபெற்றன.
  இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோயில் உபயதாரர்கள் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai