சுடச்சுட

    

    உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு இன்று பணியிட மாறுதல் கலந்தாய்வு

    By DIN  |   Published on : 22nd May 2017 05:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்ட அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெறுகிறது.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 2017 - 18ஆவது கல்வி ஆண்டுக்கான அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல், பதவி உயர்வு, பணி நிரவல் கலந்தாய்வு கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது.
    திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் வரும் 31-ஆம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடைபெறுகிறது.
    இந்நிலையில், திங்கள்கிழமை அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் (மாவட்டத்துக்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம்) கலந்தாய்வு நடைபெறுகிறது.
    எனவே, கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள அனைவரும் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாளில், உரிய நேரத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai