சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 25 தேர்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவல் துறை, தீயணைப்புத் துறைக்கான எழுத்துத் தேர்வை 21 ஆயிரம் விண்ணப்பதாரர்கள் எழுதினர்.
    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், காவல் துறையில் காலியாக உள்ள 4,569 இரண்டாம் நிலை காவலர், ஆயுதப்படையில் காலியாக உள்ள 4,627 இரண்டாம் நிலை காவலர், சிறைத் துறையில் காலியாக உள்ள 976 இரண்டாம் நிலை காவலர், தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள 1,512 பணியிடங்கள் என மொத்தம் 15 ஆயிரத்து 711 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்தத் தேர்வை பல லட்சம் இளைஞர்கள் எழுதினர். திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்தத் தேர்வு எழுத 21 ஆயிரத்து 200 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக திருவண்ணாமலையில் சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அருணை பொறியியல் கல்லூரி, சிஷ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்பட மொத்தம் 25 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மையங்களில் ஞாயிற்றுக்கிழமை எழுத்துத் தேர்வு நடைபெற்றது.
    தேர்வர்கள் அனைவரும் கடும் சோதனைகளுக்குப் பிறகே தேர்வு மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையங்களுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. தேர்வு மையங்களில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மா.ரங்கராஜன், ரவாளி பிரியா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai