சுடச்சுட

  

  சவூதி அரேபியாவில் செவிலியர் பணி: பெங்களூரில் நாளை நேர்காணல்

  By DIN  |   Published on : 22nd May 2017 05:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சவூதி அரேபியாவில் தனியார் மருத்துவமனைக்குத் தேவையான செவிலியர்
  பணிக்கான நேர்காணல் கர்நாடக மாநிலம், பெங்களூருவில் செவ்வாய், புதன்கிழமைகளில் (மே 23, 24) நடைபெறுகிறது.
  சவூதி அரேபியாவின் டையாவரம் பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் பணிபுரிய பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் படிப்புடன், ஹூமோடயாலிசஸ் பிரிவில் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்ற 150 ஆண், பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.
  தேர்வு செய்யப்படும் செவிலியர்களுக்கு தகுதி, அனுபவத்துக்கு ஏற்ப ரூ.55 ஆயிரம் மாத ஊதியத்துடன், இலவச இருப்பிடம், விமான டிக்கெட், உணவு, மருத்துவக் காப்பீடு ஆகியவை வழங்கப்படும். இதற்கான நேர்முகத் தேர்வு பெங்களூரு, இன்பேன்டரி சாலை, மோனார்க் லக்சர் உணவகத்தில் வரும் செவ்வாய், புதன்கிழமைகளில் காலை 9 மணி முதல் நடைபெறும்.
  விருப்பமும், தகுதியும் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஹூமோடயாலிசஸ் செவிலியர்கள் 044-22505886, 22502267, 22500417, 8220634383 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai