சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் அறுவடை என்ற சிறுகதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    மாவட்ட மைய நூலகத்தின் வாசகர் வட்டம் சார்பில், வாசகர் வட்ட 39-ஆவது சிறப்புக் கூட்டமும், அறுவடை என்ற சிறுகதை நூல் வெளியீட்டு விழாவும் நடைபெற்றன. விழாவுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் தலைமை வகித்தார். வாசகர் வட்டத் தலைவர் அ.வாசுதேவன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் ரா.சங்கர் வரவேற்றார்.
    அரங்க.மணிமாறன் எழுதிய அறுவடை என்ற சிறுகதை நூலை திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரிப் பேராசிரியர் ந.குப்புசாமி, அறிமுகம் செய்து வைத்துப் பேசினார். நூலின் முதல் பிரதியை கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியர் கா.சிவகாமி வெளியிட்டார்.
    புரவலர் சேர்ப்பு: விழாவில், முதுகலை தமிழ் ஆசிரியர் க.கோவிந்தம்மாள் ரமேஷ், பேராசிரியர் நீலவல்லி, சுந்தரி நடராஜன் ஆகியோர் தலா ரூ.1,000 செலுத்தி மாவட்ட மைய நூலகத்தின் 1136, 1137, 1138-ஆவது புரவலர்களாக இணைந்தனர். பின்னர், மைய நூலகத்தை அதிகம் பயன்படுத்தியவர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பட்டயம் வழங்கினார்.
    விழாவில், மைய நூலகர் சாயிராம், நல் நூலகர் த.கிருட்டிணன், நூலகர்கள், வாசகர் வட்டப் பொறுப்பாளர்கள், வாசகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai