Enable Javscript for better performance
சிற்றுந்து ஓட்டுநர் கிணற்றில் சடலமாக மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை அருகே கிணற்றில் இருந்து சிற்றுந்து ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்டார்.
    திருவண்ணாமலை வட்டம், மங்கலத்தை அடுத்த கானலாபாடி கிராமத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை காலை ஆண் சடலம் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. இதைக் கவனித்த பொதுமக்கள் இதுகுறித்து, மங்கலம் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
    போலீஸார் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், இறந்து கிடந்தவர் திருவண்ணாமலையை அடுத்த சோமாசிபாடி புதூர் கிராமத்தைச் சேர்ந்த சிற்றுந்து ஓட்டுநர் சரவணன் (32) என்பது தெரியவந்தது. இவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai